தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை

தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் ..அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.

இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.

இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு “ஹிமகஷாயம்” என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்

Advertisements

தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும்

ஈஷாவில் ஏன் பாம்பு மோதிரம் மக்களின் ஆன்மீக நலனுக்காக ஈஷாவில் வழங்கப்படும் கருவிகளில், பாம்பு மோதிரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.

சத்குரு: “ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கை என்று எதை அறிந்திருக்கிறாரோ அதன் உச்சத்தை அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது. உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.

மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது. மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது. மோதிர விரல் உங்கள் கணினி மௌசைப் போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்.

பாம்பு மோதிரத்தின் பயன்கள்: ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது. அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது. சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.

யாரெல்லாம் அணியலாம்? இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

#ஒவ்வொரு_பசுவின்_சாணமும்_ஆயிரம் #தடுப்பூசிக்கு_சமம்..
#அணுக்கதிர்கள்_கூட_துளைக்க_முடியாதது
#நம்_முன்னோர்_ஒன்றும்_முட்டாள்கள் #இல்லை..!

#அந்நாட்களில்_வீட்டு_சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35குசி வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் கி2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஷிணீயீமீ ஞீஷீஸீமீ-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே.

இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை. மேலும், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் முடிந்தவரை நடைமுறைப்படுத்துவோம்

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் காரணம் ஆகும்

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் …..

உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன்சுலினை சுரக்க இயலும் உடலில் வெப்பம் அதிகமானால் இன்சுலின் சுரப்பு குறையும் என்பதை நாம் அறிவோம் உடலில் உள்ள வெப்பத்தை பித்தத்தை குறைப்பதில் முதன்மையான மூலிகை மருதோன்றி எனப்படும் மருதாணி இது ஓர் கற்பமூலிகையாகும் ……

இரத்த சீர்கேடுகள் தான் எயிட்ஸ் புற்றுநோய் சர்க்கரை நோய் என அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்பதையும் நாம் அறிவோம் அதனால் தான் பால்வினை நோய் குஷ்டரோகம் போன்ற நோய்களுக்கு இதன் வேர் பட்டைகளை கசாயமாக பயன்படுத்த காரணம் இது இரத்ததில் உள்ள கிருமிகளை அழித்து உள்ளுறுப்புகளுக்கு ஊட்டத்தை வழங்குகிறது என்பதால் தான்

இதனை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள்ளுறுப்புகள் வளமை பெறுவதால் தான் இது கற்பமூலிகை….

மருதாணியை உள்ளங்கை உள்ளங்காலில் இடுவதற்கான காரணம் அங்கு அமைந்திருக்கும் சக்கரங்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் கடத்தபடுகிறது குறிப்பாக காஸ்மிக் கதிர்களை உள்வாங்கும் சக்தி இந்த மருதாணிக்கு இருக்க கூடும் ஏனெனில் பவுர்ணமி அன்று மருதாணி இட்டால் ஒருமணி நேரத்தில் சிவக்கும் சிவப்பு பத்து நிமிடங்களில் சிவந்தும் போகும்(இது எனது சுய அனுபவம் உணர்ந்த ஒன்று) காஸ்மிக் கதிர்வீச்சு பவுர்ணமி அன்று தான் அதிகம் இருக்கும் என்று நவீன விஞ்ஞானம் ஒப்புகொள்கிறது நமது பண்டைய திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி இரவில் நடைபெறுவதற்கு காரணமே இந்த காஸ்மிக் கதிரியக்கத்தை உணர்ந்த்தால் தான் அவ்வாறு செய்திருக்க கூடும் மனநோய்க்கு மருதாணி சிறந்த மருந்து என்ற குறிப்புகளையும் உற்று நோக்கியதால் உணர்ந்த ஒன்று இதை பற்றி பெறிய ஆய்வே செய்யலாம் சரி விசயத்திற்கு வருவோம் ….

மருதாணியை ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்துங்கள் அதன் மூலம் உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி நோய்கள் அண்டாத உடலை பேணுங்கள் ….

மருதோன்றி என்று பெயர் வரகாரணம் சித்தர்கள் இதை பயன் படுத்தி ஒரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் தோன்றியதால் தான் என்ற செவிவழி செய்தியும் உண்டு…..

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது

பெண்களை அம்மனின் அம்சமாககூறுவது ஏன்..?

கோயிலில் உள்ள அம்மனுக்குபட்டுப்புடவை கட்டி மலர் மாலைசூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி,வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகியஅணிகலன்கள் அணிவித்தாலேஅலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாககூறுகின்றனர். எனவே தான் பெண்கள்அணியும் கீழ்கண்டஅணிகலன்களுக்கும் சில காரணங்கள்கூறப்படுகிறது.

1.தாலி – தாயாகி, தாலாட்டுப்பாடகணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு – எதையும் காதோடு போட்டுக்கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி – மூக்கு தான் முதலில்சமையலை அறியும் உத்தி என்பதைஉணர்த்துகிறது.
4. வளையல் – கணவன் உன்னைவளைய, வளைய வர வேண்டும்,என்பதற்காக,
5. ஒட்டியாணம் – கணவன், மனைவிஇருவரும் ஈருடல் ஓருயிராய்ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் – எதிலும் உன் கைத்திறன்காண்பிக்க.

இவை தவிர நகைகள் உடல்ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகஉருவானவை, அதிகமான ஆபரணங்கள்தங்கத்தில் அணியப்படுவதன் காரணம்வெப்பமான நாடுகளில் வெப்பத்தைகுறைத்து, உடலை குளிர்ச்சியாகவைத்திருக்க தங்கம் ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமதுஉடலை தொட்டுக்கொண்டிருப்பதால்நாளடைவில் உடலின் அழகைஅதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

கொலுசு: பொதுவாக எல்லாநகைகளையும் தங்கத்தில் அணியும்நாம், காலில் அணியும் நகைகளைவெள்ளியில் தான் அணிகிறோம்

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமிஇருப்பதால் காலில் அணியும் நகைகள்தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன்வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றிகுளிர்ச்சியாக்கி சருமத்தைஆரோக்கியமாக்கும்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைதொட்டுகொண்டிருப்பதால் குதிகால்பின் நரம்பின் வழியாக மூளைக்குசெல்லும் உணர்சிகளைக் குறைத்துகட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமானபெண்கள் மட்டும் அணியும் ஆபரணம்.பெண்களது கருப்பைக்கான முக்கியநரம்புகள் கால் விரல்களிலேயேஇருக்கிறது.

வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தசக்தி கால் நரம்புகளில் ஊடுருவிநோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான்அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும்மோதிரம் பதற்றத்தை குறைக்கவும்,இனிமையான பேச்சு திறன், அழகானகுரல் வளத்திற்கு உதவுகிறது.

அதிலும் மோதிர விரலில்அணியப்படுவதன் முக்கிய காரணம்ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளைஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும்உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால்இதயக் கோளாறுகள் மற்றும் வயிறுகோளாறுகள் நீங்கவும் உதவுகிறது.சுண்டு விரலில் மோதிரம்அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பதுகாலம் காலமாக நடைமுறையில்இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூடநவீன உலகில் முக்கியத்துவம்பெறுகிறது.

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது. இந்த வாயுக்களைஉடலில் இருந்து அகற்றுவதற்கு தான்,மூக்கில் துளை இடும் பழக்கம்உருவானது.

இதனால் பெண்களுக்கு மூக்குதொடர்பான பிரச்சனைகள்நிவர்த்தியாகும். காற்றைவெளியேற்றுவதில் ஆண்களுக்குவலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும்பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போதுதான் உடலுக்கும் மனதுக்கும் பலன்கிடைக்கும். முறையான சுவாசபரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம்அணிய வேண்டும். இடப்புறம்அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒருநிலைப்படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும்ஆபரணம். பெண்கள்; அனைவரும்அணியும் இந்த ஆபரணத்தைஆண்களும் அணிவார்கள்.

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒருமுக்கிய சடங்காகவேகொண்டாடப்படுகிறது. காதில்துவாரமிட்டு காதணி அணிவதன்முக்கிய நோக்கம் கண் பார்வையைவலுப்படுத்தவே ஆகும்.

மோதிர விரலில் உள்ளது

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் புஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி  பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது  தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுதப்பட்டிருக்கிறது

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. காரணம்  மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு  மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்  நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்  பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும்நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது  அது சம்மந்தமான நோய்கள் குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற  மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

குங்குமம்

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும்.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.

குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்

hehehehe ….

\\தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்

\\ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

\\உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே

\\குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது.

\\ இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது.