செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை வணங்கலாமா?
➠ கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.

➠ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

➠ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

➠ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

➠ புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.

➠ எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

➠ மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

➠ செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.

➠ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

➠ வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

➠ இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

➠ திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

➠ ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.

➠ குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

➠ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

➠ பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

➠ கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.

➠ இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.

Advertisements

குக்கர் என்கின்ற விஷம்

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

“எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்”.

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் – 90%

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% – 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாம்புகளை கொல்வதாலும் திருமணத் தடை ஏற்படும்.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!..

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.

பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.

பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.

பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.

இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.

பித்ரு சாபம்
பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.

இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.

பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.

கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை
வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.

விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.

ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.

முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.

ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்

பிறந்தநாளன்று புதிய மருந்து உட்கொள்வது கூடாது

பிறந்தநாளன்று செய்யவேண்டியது செய்யக்கூடாதது ..
ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.
ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?
1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்
5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்
7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
14) வாகனங்கள் வாங்கலாம்
15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
16) உபநயனம் செய்துகொள்ளலாம்
17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும்

No need of highlighting in red for this article as every word is just a gem. 

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.!!

🌷 உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

🔵 கட்டை விரல்;

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

🔵ஆள்காட்டி விரல்;

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

🔵நடுவிரல்;

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

🔵மோதிரவிரல்;

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம். மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

🔵சிறுவிரல்;

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது. மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

🔵உள்ளங்கை;

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

🔵மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோதிர விரலில் உள்ளது

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் புஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி  பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது  தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுதப்பட்டிருக்கிறது

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. காரணம்  மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு  மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்  நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்  பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும்நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது  அது சம்மந்தமான நோய்கள் குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற  மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

குளிக்கும் முறை

குளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று )

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் “ஓம்” என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

🌻🌻 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. 🌻🌻 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.

சித்தன் அருள்…!